இணைய இணைப்புள்ள கணினி வாயிலாக
QRCode அறியும் தொழில்நுட்பம் :
படிநிலை - 1 :
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையப் பக்கம் 9 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் மின்னூல் VI ஆம் பக்கம்.
படிநிலை - 2 : மேலே உள்ள படத்தில் QRCode சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை கணினி விசைப்பலகையில் உள்ள Print Screen விசையை அழுத்தி திரையை நகலெடுத்து, Paint மென்பொருளில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஒட்டப்பட்ட படத்தை கீழே காணலாம்.
படிநிலை - 3 :
https://webqr.com/ என்ற இணையத்தளத்தை திறந்துக்கொள்ள வேண்டும். அதில் சுட்டிக்காட்டப்பட்ட கேமரா குறும்படத்தை அழுத்தவும்.
படிநிலை - 4 :கேமரா குறும்படத்தை அழுத்தியதும்; தோன்றும் கீழே உள்ள படத்தில் உள்ள "choose File" என்ற பொத்தானை அழுத்தவும்.
படிநிலை - 5 :
கீழே உள்ளவாறு, Open உரையாடல் பெட்டி திறக்கும். அதில் படிநிலை - 2 ல் சேமித்த படத்தை தேர்வுச்செய்யவும்.
படிநிலை - 6 :
கீழே சுட்டிக்காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு இணைய இணைப்பு தாமாக தோன்றும். அதனை அழுத்த தோழர் திலீப் அவர்கள் செய்து காட்டும் செயல்முறை விளக்கத்தை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக